Categories: சினிமா

“அந்த வீடியோவ பார்த்தா தேடி வந்து அடிப்பீங்க”.. ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்த குஷ்பு, ராதிகாவுக்கு திடீர் அழைப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Spread the love

பிரபல நடிகையான ரோஜா ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி அளித்த பேட்டியில் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்த கூறி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ரோஜா, ஒரு முன்னாள் மந்திரி என்னை பற்றி இவ்வளவு மோசமாக பேசியுள்ளார். அவரது வீட்டிலும் மனைவி, மகள், மருமகள்கள் இருக்கின்றனர். அதனை நினைவில் வைத்துக் கொண்டு அவர் பேச வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படி எல்லாம் பேசுவீர்களா என கேள்வி எழுப்பி கதறி அழுதார்.

நடிகை ரோஜாவுக்கு ஆதரவை தெரிவிக்கும் விதமாக குஷ்புவும், ராதிகாவும் வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோ ஆந்திராவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தில் ஜனசேனா கட்சியின் திருப்பதி நகர பொறுப்பாளர் கிரண் ராயல் பேசியதாவது, ரோஜா மிகவும் ஆபத்தானவர். அவர் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, எங்களுடைய கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பற்றி என்னென்ன பேசினார் என்பது குஷ்பூ, ராதிகா ஆகியோருக்கு தெரியாது.
இது தொடர்பான வீடியோக்களை குஷ்பூ ராதிகா ஆகியோரின் விலாசங்களை தேடி கண்டுபிடித்து அனுப்பி வைக்கிறோம். அதனைக் கேட்டுவிட்டு நீங்களே விமானம் ஏறி நகருக்கு வந்து ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ அதனால் அடியுங்கள். ஆந்திராவிலும் நடிகைகள் இருக்கின்றனர். ரோஜா இடம்பெற்றிருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த நடிகைகள், அவர் கட்சியில் இருக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், நகரி தொகுதி பொதுமக்கள் ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை. அவரைப் பற்றி தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என கிரண் ராயல் கூறியுள்ளார்.
admin

Recent Posts

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

16 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

23 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

26 minutes ago

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

36 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

41 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

44 minutes ago