நெல்லை மாவட்டம் கொண்டாநகரத்தைச் சேர்ந்த மகாராஜனும், கடலூர் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு மகாராஜன் தனது 23 வயது அத்தை மகளான அகிலாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதற்கு அமராவதி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மகளைக் காண்பதற்காக அமராவதியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் ஓராண்டுக்கு முன்பே வீட்டைக் காலி செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகாராஜனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அமராவதி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். மருமகனின் பதிலில் சந்தேகமடைந்த தாய், உடனடியாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மகாராஜனின் செல்போன் சிக்னல் மற்றும் அழைப்பு விவரங்களைக் கொண்டு அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஆண்டு மே மாதம் கங்கைகொண்டான் சிப்காட் அருகேயுள்ள பாப்பாங்குளம் விலக்கு பகுதியிலுள்ள கல்குவாரிக்கு அமராவதியை அழைத்துச் சென்று, பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொன்றதாக மகாராஜன் உண்மையை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கல்குவாரிப் பள்ளத்திலிருந்து ஒரு சேலை, மனித மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டுகளை மீட்டனர். அவை அனைத்தும் தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஓராண்டாக மறைக்கப்பட்டிருந்த இந்த கொடூரக் கொலை சம்பவம் பெற்றோர் கொடுத்த புகாரால் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…