மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா…? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க… ஹெல்த் டிப்ஸ் இதோ…!!

By Devi Ramu on மார்கழி 16, 2025

Spread the love

குளிர்காலத்தில் பலருக்கும் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையை உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

  • வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிப்பது அவசியம். குறிப்பாக, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்கும். ஒரு நாளைக்குக் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கப் பழகுவது நல்லது.

       
  • குளிர்காலத்தில் ஜீரண மண்டலம் மந்தமாக இருக்கும் என்பதால், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் உள்ள சீசன் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். கேரட், முள்ளங்கி, கீரைகள், கொய்யா, மாதுளை போன்றவற்றை அதிகமாகச் சேர்ப்பது மலம் கழித்தலை இலகுவாக்கும்.

  • செரிமான ஆரோக்கியத்திற்கு உணவு மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் முக்கியம். குளிர்காலத்தில் தாமதமாகத் தூங்குவது செரிமானத்தைப் பாதிக்கும். தினமும் 7-8 மணி நேரம் உறங்குவது மன அழுத்தத்தைக் குறைத்து, செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

  • குளிர்காலத்தில் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது மலச்சிக்கலை அதிகரிக்கும். எனவே, உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். மேலும், சூரிய ஒளி கிடைக்கும்போது வெளியே சென்று நிற்பதன் மூலம் வைட்டமின் டி பெற்று குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

  • மற்ற பருவங்களை விட, குளிர்காலத்தில் உணவைத் தவிர்ப்பது அல்லது பசியுடன் இருப்பது குடலில் அமில உற்பத்தியை அதிகரித்து, வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். எனவே, சரியான நேரத்தில், சிறிய அளவுகளில் அடிக்கடி உணவு உட்கொள்ள முயற்சிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எண்ணெயில் வறுத்த, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.