வீட்ல எங்க பார்த்தாலும் பல்லி தொல்லை அதிகமா இருக்கா?… இந்த 4 பொருள் இருந்தா போதும்.. இனி உங்க வீட்டு பக்கமே எட்டி கூட பார்க்காது..!

Spread the love

பொதுவாகவே வீட்டின் குளியலறையில் பல்லி தொல்லை அதிகமாகவே இருக்கும். அங்கு பல மறைவிடங்கள் இருப்பதால் குளியலறையில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினம் ஆகிறது. வீட்டில் அறையிலிருந்து சமையலறை வரை பல்லிகளின் அச்சுறுத்தல் அதிகரித்தால் அது ஒரு அசவுகரியத்தை நமக்கு தரும். பல்லிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க சில சந்தையிலிருந்து பூச்சிக்கொல்லி ஸ்பிரேக்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். சிலர் குச்சிகள் உதவியுடன் அவற்றை விரட்ட முயற்சிக்கிறார்கள்.

இவற்றை விரட்டுவதில் வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக வெங்காயம், பூண்டு, கருப்பு மிளகு மற்றும் கிராம்புகளின் உதவியுடன் வீட்டிலேயே ஒரு கரைசலை தயாரித்து எங்கெல்லாம் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதோ அங்கே எல்லாம் இதனை தெளித்து வீட்டில் இருந்து விரட்டி விடலாம். முதலில் இரண்டு பூண்டு மற்றும் வெங்காயத்தை உரித்து கத்தியால் நறுக்கி அதில் 4 முதல் 5 கிராம்பு மற்றும் 10 கருப்பு மிளகு சேர்த்து இந்த பொருட்களை மிக்ஸியில் அரை கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த பிறகு ஒரு சல்லடை உதவியுடன் வடிகட்டி அதன் திரவத்தை பிரித்து தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் டெட்டால் திரவத்தை சேர்த்து இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஸ்பிரேவை பல்லி தொல்லை இருக்கும் இடங்களில் தெளித்தால் இனி உங்க வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்காது. இந்த டிப்ஸ் ஒருமுறை ஃபாலோ பண்ணி பாருங்க.

Nanthini

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

44 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

54 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago