அயர்ன் பாக்ஸ் அடியில் கருப்பாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். புதிதாக ஒரு துணியை அயர்ன் செய்யும்போது அந்த கறை துணிகளில் ஒட்டி புது துணியை நாசம் செய்து விடும். அயர்ன் செய்து ஒரு துணியை அணியும்போது அது அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அயன் பாக்ஸில் உள்ள கறையை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சுத்தம் செய்யலாம்.
முதலாவதாக ஒரு பஞ்சை எடுத்து எலுமிச்சை சாற்றில் நினைத்து அயர்ன் பாக்ஸில் உள்ள கருகிய இடத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் சுத்தமான துணியால் அயர்ன் பாக்ஸை நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பேக்கிங் சோடா, பர்பஸை, ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற பொருட்களை வாங்கி சுத்தம் செய்யலாம். பேக்கிங் சோடாவை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து அயர்ன் பாக்ஸ் கறையுள்ள இடங்களில் தேய்த்து எடுத்தால் அந்த இடம் பளபளப்பாக மாறிவிடும்.
