பெரும்பாலான வீடுகளில் செம்பருத்தி பூ செடி வைத்திருப்பார்கள். இந்த செடி ஏரளமான மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் இதில் பலரும் டீ செய்து தயாரித்து குடித்து வருகிறார்கள். இந்த பூவை தலைக்கு தேய்க்கும் எண்ணெயிலும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பல பயன்பாடுகளுக்கு இந்த செடியானது வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். ஆனால் சிலர் வீட்டில் இருக்கும் செம்பருத்தி பூக்கள் பூக்காது. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம். இதற்கு தான் தண்ணீரில் ஒரு பொருளை கலந்து தெளிக்கும் போது செம்பருத்திப்பூ பூத்துக் குலுங்குமாம். இந்த தண்ணீரின் மூலம் செடிகளுக்கு பல ஊட்டச்சத்து கிடைக்கிறது.
இதனால் செடி கொத்துக்கொத்தாக பூக்க தொடங்கும். அந்த வகையில் இதற்கு அதிகமாக தேவைப்படும் சக்தி இரும்பு சத்து. இதைச் செடிக்கு கொடுக்க வேண்டும் என்றால் கடைகளில் iron dust என்று கேட்டு வாங்க வேண்டும். அதை செடிகளின் மீது நேராக உபயோகிக்க கூடாது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒன்று முதல் இரண்டு கிராம் iron dust கலந்து வேர்ப்பகுதியிலும், செடி மீதும் தெளிக்க வேண்டும் இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தெளித்து வர ஓரிரு வாரங்களுக்குள் செம்பருத்தி செடியில் அதிகமான பூ பூக்கும்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…