முகத்தை அடிக்கடி தொடுபவரா நீங்க…? இது தெரிஞ்சா அப்படி பண்ண மாட்டீங்க… சிம்பிள் பியூட்டி டிப்ஸ்…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2025

Spread the love

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவர். அதற்கு சில எளிய பழக்கங்களைப் பின்பற்றினால் போதும். சருமப் பராமரிப்பில் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களைப் பார்க்கலாம். சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. வீட்டுக்குள்ளே இருந்தாலும் சூரியனின் புற ஊதா கதிர்கள் ஜன்னல் வழியாக சருமத்தைப் பாதிக்கும். எனவே தினமும் சன்ஸ்க்ரீன் தடவுவது அவசியம்.

தலையணை உறையை அடிக்கடி மாற்ற வேண்டும். அழுக்கு உறை முக சருமத்துக்கு பெரிய எதிரி. வாரம் ஒருமுறை துவைத்து வெயிலில் உலர்த்தி பயன்படுத்துங்கள். முகத்தை கைகளால் அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும். கைகளில் இருக்கும் கிருமிகள் சருமத்துக்கு சென்று பிரச்சினை உண்டாக்கும்.

   

தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சருமம் வறண்டு முதுமைத் தோற்றம் வரும். போதுமான தண்ணீர் குடித்தால் சருமம் பொலிவு பெறும். புதிய அழகு சாதனப் பொருட்களை உடனே வாங்கி பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரின் சரும வகை வேறு. தன் சருமத்துக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்யுங்கள். இந்த எளிய பழக்கங்களைப் பின்பற்றினால் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.