ஆசிய கோப்பை கிரிக்கெட்: “அன்று உண்மையில் இதுதான் நடந்தது” 1 மணி நேரம் காத்திருந்தோம்… புது விளக்கம் கொடுத்த திலக் வர்மா..!!

Spread the love

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானில் வைத்து இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்விஇடமிருந்து கோப்பை பெற இந்தியா மறுத்தது. இதனை அடுத்து அந்த கோப்பையை கொண்டு சென்றார் நக்வி. பின்னர் இந்த கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிசிசிஐயும் வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த நக்வி கோப்பையை  நான் தான் வழங்குவேன் என்றும் நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கும் நிகழ்ச்சி வைத்திருப்பதாகவும் தவறாமல் இந்திய அணி வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர்பாக அன்றைய இறுதி போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா  என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதாவது நாங்கள் உண்மையில் ஒரு மணி நேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளை பார்த்தால் தெரியும். நான் தரையில் படுத்திருப்பேன். மீதம் உள்ளவர்களும் தரையில் படுத்து இருந்தார்கள். நாங்களும் காத்திருந்தோம். கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூரியகுமார் யாதவ்  தலைமையிலான இந்திய அணி கோப்பையை பெறப்போவதில்லை என்பதை நாங்கள் தெரிந்ததும் அர்ஷிப் சிங் தான் ஒரு ஐடியா கொடுத்தார். கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று கூறினார். உடனே நாங்கள் அதற்கு ஒப்புதல் அளித்து அதன் பின்னர் தான் கோப்பை இல்லாமல் கொண்டாடினோம் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

7 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

22 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

25 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

29 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

33 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

36 minutes ago