Categories: சினிமா

படத்துல பிரியங்கா மோகன் நடிச்ச 20 நிமிட FOOTAGE -ஆ காணோம்.. கதறும் படக்குழுவினர்.. என்னடா இது, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ கதையா இருக்கு..??

Spread the love

தென் இந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா மோகன். இவர் “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி இவர் நடித்து வருகிறார். தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியதன் மூலம், தமிழ் ஆடியன்ஸை கவர்ந்திருந்தார்.

#image_title

இந்தப் படத்தில் இவரின் எதார்த்த நடிப்பும், காமெடியும், இளசுகளின் மனதை கவர்ந்தது எனலாம். அதனை தொடந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்திலும் நடித்திருந்தார் பிரியங்கா. அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா, தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கைவசம் ஜெயம் ரவியுடன் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

#image_title

இதற்கிடையில், அவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் எடுக்கப்பட்ட டிக் டாக் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தினுடைய டிரைலரை பார்த்து அதிர்ந்து போயினர் பிரியங்காவின் ரசிகர்கள். எந்த படத்திலும் இல்லாத அளவு, படுக்கை அறை காட்சிகளில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருந்தார் பிரியங்கா. கடந்த மாதம் 28-ம் தேதி இப்படம் வெளியான நிலையில், சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படக்குழு இப்படத்தை பார்த்துள்ளனர். அதில் பிரியங்கா மோகன் நடித்திருந்த 20 நிமிட காட்சிகள் இல்லாததை கண்டு படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

#image_title

சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் அந்த காட்சிகள் மாயமாகி இருந்ததால் படக்குழுவிற்கு சந்தேகம் ஏற்பட்டடு, தற்போது நீதிமன்றத்தை நாடவுள்ளதாக படத்தின் இயக்குநர் மதன் குமார் கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களை அணுகிய போது, தொழில் நுட்ப கோளாறால் இந்த தவறு நடந்து விட்டதாக கூறியதாகவும், ஆனால் அதனை ஏற்க மறுத்து, தற்போது வக்கீல் நோட்டிஸ் அனுப்பவுள்ளதாகவும் மதன்குமார் தெரிவித்துள்ளார்.

Archana

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago