Categories: சினிமா

முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில்.. 40 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பீஸ்ட் பட நடிகர்..

Spread the love

மலையாள திரையுலகில் எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்டாக செய்து தரமான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷைன் டாம். நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தவர் ஷைன்.

#image_title

2000-ம் ஆண்டு உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஷைன், அதன் பிறகு 2002-ம் ஆண்டு வெளியான நம்மாள் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் திரையின் முன் தோன்றி நடிகராகவும் ஆனார். அதன்பின், 2011-ம் ஆண்டு வெளியான கதாமா என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான ஷைன், 2021-ல் ஈ அடுத்த காலத், 2013-ல் அன்னையும், ரசூலும் என அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார்.

#image_title

இப்படி தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 2014-ம் ஆண்டு வெளியான இதிஹாசா என்ற திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஃபேன்டசி நகைச்சுவை ஜானரில் உருவான இப்படம் அந்தாண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் இருந்தது. இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ஷைன், தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் பான் இந்தியா படமான தேவரா பார்ட்-1, மலையாளத்தில் நடிகர் திலகம், தங்கமணி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

#image_title

இவற்றை எல்லாம் தாண்டி, அடிக்கடி சர்ச்சை கருத்துகளால் இணையத்தில் டிரெண்டிங்கும் ஆகி வருவார் ஷைன். சமீபத்தில், மம்முட்டி, கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது விஜய் ஒன்றும் பெரிய நடிகர் அல்ல, அவர்கள் அளவுக்கு அவர் நடிப்பதில்லை. இருந்தாலும் அவருக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிரபல மாடல் அழகியான தனுஜாவை சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த 1-ம் தேதி கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

#image_title

ஷானுக்கு ஏற்கனவே தபீதா மேத்யூஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று பிறகு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் ஆனது. இந்த தம்பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், 40 வயதில் தற்போது புது வாழ்க்கைக்கு தயாராகியுள்ளார் ஷைன்.

Archana

Recent Posts

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

6 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

11 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

14 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

22 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

29 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

36 minutes ago