Logo
  • லேட்டஸ்ட் நியூஸ்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • உலகம்
  • சினிமா
  • அரசியல்
  • க்ரைம்
  • வேலைவாய்ப்பு
  • டெக்னாலஜி
  • விளையாட்டு
  • ஆன்மிகம் & ஜோதிடம்
  • லைப் ஸ்டைல்
  • வர்த்தகம்
  • வரலாறு & ஆச்சரிய தகவல்
  • வீடியோ
  • ABOUT US
  • Home
  • Newsletter
  • PRIVACY POLICY
  • TERMS AND CONDITIONS
  • Home
  • சினிமா
  • முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில்.. 40 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பீஸ்ட் பட நடிகர்..
  • முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில்.. 40 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பீஸ்ட் பட நடிகர்..

    By Archana on தை 4, 2024

    Spread the love

    மலையாள திரையுலகில் எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்டாக செய்து தரமான நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷைன் டாம். நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தவர் ஷைன்.

    #image_title

    2000-ம் ஆண்டு உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஷைன், அதன் பிறகு 2002-ம் ஆண்டு வெளியான நம்மாள் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் திரையின் முன் தோன்றி நடிகராகவும் ஆனார். அதன்பின், 2011-ம் ஆண்டு வெளியான கதாமா என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான ஷைன், 2021-ல் ஈ அடுத்த காலத், 2013-ல் அன்னையும், ரசூலும் என அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார்.

       
       

    #image_title

     

    இப்படி தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 2014-ம் ஆண்டு வெளியான இதிஹாசா என்ற திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஃபேன்டசி நகைச்சுவை ஜானரில் உருவான இப்படம் அந்தாண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் இருந்தது. இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ஷைன், தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் பான் இந்தியா படமான தேவரா பார்ட்-1, மலையாளத்தில் நடிகர் திலகம், தங்கமணி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    #image_title

    இவற்றை எல்லாம் தாண்டி, அடிக்கடி சர்ச்சை கருத்துகளால் இணையத்தில் டிரெண்டிங்கும் ஆகி வருவார் ஷைன். சமீபத்தில், மம்முட்டி, கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது விஜய் ஒன்றும் பெரிய நடிகர் அல்ல, அவர்கள் அளவுக்கு அவர் நடிப்பதில்லை. இருந்தாலும் அவருக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிரபல மாடல் அழகியான தனுஜாவை சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் சம்மதத்துடன், கடந்த 1-ம் தேதி கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

    #image_title

    ஷானுக்கு ஏற்கனவே தபீதா மேத்யூஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று பிறகு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் ஆனது. இந்த தம்பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், 40 வயதில் தற்போது புது வாழ்க்கைக்கு தயாராகியுள்ளார் ஷைன்.

    இடுகை பட்டியல்

    Previous Postபடத்துல பிரியங்கா மோகன் நடிச்ச 20 நிமிட FOOTAGE -ஆ காணோம்.. கதறும் படக்குழுவினர்.. என்னடா இது, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ கதையா இருக்கு..??
    Next Postஇந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா..? ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்..

    Follow Us


    © Copyright Tamizhanmedia.net 2026

    • Buy Theme