தக் லைஃப்பை நம்பி மோசம் போன சிம்பு… ஆத்மனின் தலையில் பேரிடியை இறக்கிய ஆண்டவர்..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த நிலையில் மாநாடு திரைப்படம் மூலமாக கம்பேக் கொடுத்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. நடிகர் சிம்புவின் கரியரில் முதல் முறையாக 100 கோடி வசூலித்த திரைப்படமும் இதுதான். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல என அவர் கடைசியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் அவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் தக் லைஃப். மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் சிம்புவும் கமல்ஹாசனுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நெகட்டிவ் விமர்சனத்தால் விரைவில் OTT யில் வெளியாகும் தக் லைஃப்? - Sathiyam  TV

   

இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இப்படியான நிலையில் இந்த படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் அதன் பிறகு கமிட்டான படங்களுக்கு சம்பளம் வாங்காமல் சிம்பு அட்வான்ஸ் மட்டும் வாங்கியுள்ளார். ஏனென்றால் தக் லைஃப் வெற்றியடைந்தால் சம்பளத்தை அதிகரித்து விடலாம் என்று ஐடியாவில் அவர் இருந்துள்ளார். ஆனால் அவர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது தக் லைஃப் படத்தின் ரிசல்ட். இதனால் சம்பளத்தை அதிகரிக்க முடியாத நிலைக்கு சிம்பு தள்ளப்பட்டுள்ளார். தக் லைஃப் படத்தில் நடிப்பதற்காக சிம்பு 30 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.