இன்னும் 10 படம் கூட முழுசா நடிக்கல… அதுக்குள்ள 4 கோடி சம்பளம் கேட்கும் இளம் நடிகை…!!

By Soundarya on ஆனி 17, 2025

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா. 2019 ஆம் ஆண்டு கிஸ் என்ற கன்னட திரைப்படம் மூலமாக திரையுலகில் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பெல்லி சண்டாடி என்ற திரைப்படம் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற மதுரா நகரிலோர் என்ற பாடலில் இவர் ஆடிய நடன அசைவுகள் பலராலும் வெகுவாக ஈர்க்கப்பட்டது.

   

அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் சமீபத்தில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் இடம்பெற்ற குறிச்சி மடத்து பெட்டி என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.ஒத்த பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டுள்ளார்.

   

 

அதேசமயம் புஷ்பா 2 படத்திலும் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கிவிட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். ஹிந்தியில் கார்த்திக் ஆரியன் ஜோடியாக ஒரு படத்திலும், தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். சென்ஷேஷனல் ஹீரோயினாக வலம்வரும் இவர் ஒரு படத்துக்கு இதுவரை மூன்று கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது சம்பளத்தை அதிரடியாக ஏற்றி நான்கு கோடியாக வாங்க முடிவு செய்துள்ளார்.