அம்மாடியோ… நம்பவே முடியல… சீசன் இல்லாத காலகட்டத்திலும்… ரோஹ்தாங் மேகி வியாபாரி கல்லா கட்டுவது எப்படி?… இணையத்தில் வியந்துபோன நெட்டிசன்கள்…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற ரோதாங் கணவாயில் மேகி விக்கும் ஒருவரின் வியாபாரம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் சுற்றுலா சாரா பருவத்தில்கூட இவர் தினசரி நல்ல லாபம் ஈட்டுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வைரல் காணொளியின்படி, அந்த வியாபாரி தினமும் சுமார் 60 முதல் 70 தட்டுகள் மேகியும், 200 கப் டீயும் விற்பனை செய்கிறார். ஒரு தட்டு மேகி 100 ரூபாய்க்கும், ஒரு கப் டீ 40 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், சுற்றுலா சாரா காலத்தில்கூட அவரது ஒரு நாள் மொத்த வருமானம் 14,000 முதல் 15,000 ரூபாய் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

   

https://www.instagram.com/reel/DfKoZV1ThLz/?utm_source=ig_web_button_share_sheet

   

எனினும், இது வெறும் மொத்த விற்பனைத் தொகை மட்டுமே என்றும், கடுமையான குளிரில் பொருட்களை மலைப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகள் மற்றும் மூலப்பொருட்களின் விலையைக் கழித்தால் மட்டுமே உண்மையான லாபம் தெரியும் என்று இணைய பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வளவு சவால்களையும் தாண்டி கடினமான சூழ்நிலையில் உழைக்கும் அந்த வியாபாரியின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.