அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெருநாய் மீது காரை ஏற்றிவிட்டு… உயிரோடு இருக்கிறதா என எட்டி உதைத்த இன்ஃப்ளூயன்ஸர்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

ஜெய்ப்பூரில் உள்ள ஊடகவியலாளரும், விலங்கு நல ஆர்வலருமான சிவாங்கி சிங் ராவ், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள காணொளி மற்றும் தகவலின்படி, நள்ளிரவில் வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் அப்பகுதியில் தெருநாய்களைத் திட்டமிட்டு துரத்தியதாகவும், அதில் ஒரு நாய் மீது வாகனம் ஏறி உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நள்ளிரவு 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த காரின் பதிவு எண்ணையும், சம்பந்தப்பட்ட வாகனத்துடன் தொடர்புடையவராகக் கூறப்படும் ரோஹித் கத்ரி என்பவரின் சமூக வலைதளப் பக்கங்களையும் சிவாங்கி குறிப்பிட்டுள்ளார். தான் தினமும் உணவளிக்கும் நாய்கள் மீது வாகனம் மோதப்பட்டதைக் கண்டறிந்த அவர், காரில் வந்தவர்கள் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பதுடன், உயிரிழந்த நாயை அது உயிரோடு இருக்கிறதா என்பதைச் சோதிக்கக் கால் உதைத்துப் பார்த்ததாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/DfRZcM7SLSw/?utm_source=ig_web_button_share_sheet

   

தான் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளுக்கு அந்த நபர் பதிலளிக்கவில்லை என்றும், சமூக வலைதளப் பயனர்கள் இந்த விவகாரத்திற்கு நீதி கிடைக்க இந்தக் காணொளியைப் பரவலாகப் பகிர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். விலங்கு நல ஆர்வலர் என்று கூறிக்கொள்பவர் இவ்வாறான கொடூரச் செயலில் ஈடுபட்டது இணையத்தில் பெரும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.