“12 வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஜாக்பாட்…!” குரு-சந்திரன் தரும் கஜகேசரி யோகம்…. இந்த 3 ராசிக்கு இனி குபேர வாழ்க்கைதான்..!!

By Devi Ramu on தை 3, 2026

Spread the love

2026 புத்தாண்டு தொடக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் குரு மற்றும் சந்திர பகவான் ஒன்றாக இணைவதால், மிகவும் சக்திவாய்ந்த ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாகிறது. ஜனவரி 2 முதல் 4-ம் தேதி வரை நீடிக்கும் இந்த அபூர்வ கிரக சேர்க்கையினால் மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் தொடங்கவுள்ளது.

மிதுன ராசியினருக்குத் தொழிலில் எதிர்பாராத உயர்வுடன் பண வரவு அதிகரிக்கும்; துலாம் ராசியினருக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் வகையில் பாக்கியங்கள் சேரும்; கும்ப ராசியினருக்கு நீண்ட நாள் நிதி நெருக்கடிகள் தீர்ந்து பொருளாதார நிலை மேலோங்கும்.

   

இந்தக் காலக்கட்டத்தில் இந்த ராசிகளைச் சேர்ந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அபரிமிதமான லாபத்தைப் பெறலாம் என்பது ஜோதிடக் கணிப்பு. குறிப்பாக, தடைபட்ட காரியங்கள் யாவும் வெற்றிபெறுவதுடன், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் அரச வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளது. நற்பலன்கள் மேலும் அதிகரிக்க அந்தந்த ராசிக்காரர்கள் திருமால் மற்றும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு.