தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் ஒரு “அழிந்து வரும் கட்சி” என்று சாடிய அவர், அந்தக் கட்சியின் தமிழகத் தலைவரே அதற்குச் சான்றாக விளங்குவதாகக் கிண்டல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் ‘டெல்லி கோஷ்டி’ மற்றும் ‘தமிழ்நாடு கோஷ்டி’ என இரண்டு பிரிவுகள் இருப்பதாகவும், இந்த உட்கட்சிப் பூசல்களால் கட்சி பலவீனமடைந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலின் போது மற்ற கட்சிகளுடனான கூட்டணி அமையாமல், காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டு “நடுரோட்டில் நிற்கப்போகும்” நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அண்ணாமலை ஆரூடம் கூறியுள்ளார். தமிழக அரசியலில் 2026 தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த விமர்சனம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
