மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பகுதியில் 3 வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்காபூர் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. ஸ்ரீ ராஜ் அமோல் ஷின்டே என்ற மூன்று வயது சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய நண்பர்களை கூப்பிடுவதற்காக பால்கனியின் சுவரில் ஏறி வளைந்துள்ளான். அந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் பேலன்ஸ் தவறி கீழே விழுந்துள்ளான். இந்த விபத்தில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை நீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
