அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். அவருடைய சொந்த மாவட்டமான ஈரோட்டில் கட்சி பதவியில் இருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்தார். இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் மௌனம் காத்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மொத்தமாக செங்கோட்டையனின் பதவியும் அவருடைய ஆதரவாளர்கள் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. என் நிலையில் தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு கட்சிகள் இல்லை, இரண்டுமே ஒன்று போலவே செயல்படுகிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்று தெரிவித்த அவர், அதனால்தான் அன்பிற்கினிய இளவல் விஜயின் கட்சியில் இணைந்ததாகவும் பேசி உள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டில் மக்களால் மாபெரும் புரட்சியை நடக்கும் என்றும் மக்களால் வரவேற்கப்படுகின்ற விஜய் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
