ஹோட்டலுக்கு ஜோடியாக வந்து தனி ஆளாக போனால் கவனமா இருங்க…! 10 நாட்களில் அடுத்தடுத்து 3 பெண்கள் கொலை… நடந்தது என்ன…? உரிமையாளர்களை எச்சரிக்கும் போலீஸ்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிறிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 3 இளம் பெண்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீயாப்பூர், எஸ்.ஆர்.நகர் மற்றும் கொத்தகுடா ஆகிய இடங்களில் உள்ள விடுதிகளில் ஆண்கள் சிலர் தங்களது பெண் தோழிகளை அழைத்து வந்து, பின்னர் அவர்களைக் கொலை செய்துவிட்டு தனியாகத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் அடையாளச் சான்றுகளை தீர விசாரிக்காமல் அறை வழங்கும் ஹோட்டல்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், ஜோடியாக அறைக்கு வந்துவிட்டு, அதில் ஒருவர் மட்டும் தனியாக வெளியேறினால் உடனடியாகக் கவனத்தில் கொண்டு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகங்களுக்குக் காவல்துறை மற்றும் ஹோட்டல் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.