பிரசவத்தின் போது வலிப்பு வந்ததா…? இறந்தே பிறந்த குழந்தை… அடுத்து சில மணி நேரத்தில் தாயும் இறப்பு… உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியாலில் உள்ள தனியார் மருத்துவமனையில், குடிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் குழந்தை இறந்தே பிறந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் அந்தப் பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் அலட்சியமுமே இதற்குக் காரணம் எனச் சாடிய பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு நீதிகேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். அதேவேளையில், பிரசவத்தின் போது பெண்ணிற்கு வலிப்பு ஏற்பட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என்றும், இதுகுறித்த ஆபத்துகளைப் பெற்றோருக்கு முன்கூட்டியே எச்சரித்திருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.