பிரேக் ஃபெயிலியர்… லாரி மோதியதில் நொறுங்கிய 3 வாகனங்கள்… இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உருக்குலைந்த வாகனத்தின் இடிபாடுகளுக்குள் டிரைவர் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்குக் போராடியபடி சிக்கிக்கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸாரும் மீட்புக் குழுவினரும் இடிபாடுகளை அகற்றி அவரை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

   

கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் அருகில் உள்ள தாரி பாலத்தில் இதேபோன்று கொடூர விபத்து நடந்த நிலையில், தற்போது பூம்கர் பாலத்தில் மீண்டும் லாரி பிரேக் ஃபெயிலியர் ஆகி விபத்து நேரிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.