“மனைவி ஆசையை விட தங்கம் பெருசா?”…. ரூ.1.65 லட்சம் ஐபோன் பரிசளித்து அசத்திய கணவரின் நெகிழ்ச்சி சம்பவம்…..!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான ஐபோன் 18 புரோ (iPhone 18 Pro) செல்போனை பரிசாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக தனது மனைவி ஐபோன் வாங்கித் தருமாறு ஆசையோடு கேட்டபோது, கையிருப்பில் போதுமான பணம் இல்லாததால் அவரால் வாங்கித்தர முடியவில்லை. இந்த நிலையில், குடும்பத்தில் இருந்த தங்க நகையை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு, மனைவியின் விருப்பத்தை தட்டாமல் நிறைவேற்றி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.