தமிழ் சினிமாவில் தனக்கு முன்னோடி இல்லாத நடிகர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். மேடை நாடகத்தில் முடி சூடா மன்னனாக விளங்கியவர். 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அதன் பின்னர் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை பாத்திரம் என்றால் கூப்பிடுங்கள் எம் ஆர் ராதாவை என்றுதான் இயக்குனர்கள் சொல்வார்களாம். அந்தளவுக்கு நடிப்பில் கொடிகட்டி பறந்தார்.
இதற்கிடையில்தான் அவரின் வாழ்க்கையை திருப்பிப் போடும் அந்த சம்பவம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக எம் ஆர் ராதா, எம் ஜி ஆரை சுட அதற்காக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அவர் திரும்பியபோது அவருக்கு சினிமாவில் முன்பு போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தால் எம் ஜி ஆரின் கோபத்துக்கு ஆளோவோம் என்று பலரும் அவரை தவிர்த்துவிட்டனர். சிவாஜியின் படங்களில் கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதன் மூலம் தமிழ் சினிமாவிலேயே அதிக நாட்கள் சிறையில் இருந்த நடிகர் என அறியப்படுகிறார் எம் ஆர் ராதா. இவருக்கு அடுத்த இடத்தில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர்கள் என்றால் அது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என சொல்லப்படும் தியாகராஜ பாகவதரும், கலைவாணர் என அழைக்கப்படும் என் எஸ் கிருஷ்ணன் அவர்களும்தான்.
இவர்கள் இருவரும் பிரபல பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சம்மந்தம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவரும் 2 ஆண்டுகள் அளவுக்கு சிறையில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…
நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…