Categories: சினிமா

சூர்யாவின் கங்குவா படம் அட்டர் ப்ளாப் ஆக காரணமாக இருந்தது இந்த மூனு பேருதான்.!

Spread the love

தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.

சரவணன் என்ற பெயரை மாற்றி சூர்யா என பெயர் வைத்து அவரை நடிகராக்கினார். அதன் பொன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார்.

இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் படு மோசமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கங்குவா படத்தில் உள்ளடக்கமாக எதுவுமே இல்லை. வெறுமனே காடுகளில் பிரம்மாண்டமாகக் காட்சிகளை எடுத்துவிட்டால் அது பாகுபலி போல வந்துவிடும் என நினைத்து எடுத்துள்ளார்கள்.

அதனால் படம் பற்றி ஓவர் பில்டப் கொடுக்காமல் இருந்திருந்தாலே இந்தளவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்திருக்காது. அப்படி படத்தைப் பற்றி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஒரு நெகட்டிவ் பிம்பத்தை உருவாக்கியவர்கள் அந்த படத்தின் இயக்குனர் சிவாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்செயனும்தான்.

படம் ஆரம்பித்ததில் இருந்து இவர்கள் கொடுத்த பில்டப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்தியாவே பார்க்காத படம், பாகுபலிக்கு சவால் என்றெல்லாம் பேசிப் பேசியே ரசிகர்களுக்குப் படத்தை திகட்டவைத்தனர். இப்படி ஓவர் பில்டப் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதற்கேற்றவாரு படம் இருக்கவேண்டும். படம் சுமாராக இருந்தால் இந்த ஓவர் பில்டப் கொடுக்கும் வேலையாவது செய்யாமல் இருந்திருக்க வேண்டும். இயக்குனர் சிவா இன்னொரு பக்கத்தில் உலகிலேயே தான்தான் பணிவான மனிதன் என்பது போல குழைந்து குழைந்து நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் படம் பற்றி அவர் சொன்ன பில்டப்பில் ஒரு சதவீதம் கூட படத்தில் இல்லை என்பதுதான் சோகம்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago