தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது நிச்சயம் எம்ஜிஆர் ஆக மட்டும் தான் இருக்க முடியும்.
தமிழ்நாட்டிற்கும் மூன்றெழுத்து மந்திரத்திற்கும் பிரிக்க முடியாத பந்தம் தொடர்ந்து இருந்து வருகிறது. அரை நூற்றாண்டைக் கடந்தும் தற்போது வரை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத மூன்று எழுத்து மந்திரம் தான் எம்ஜிஆர். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர் மக்களிடமும் ஆசப் பாசமாக பழகுவதில் வல்லவர். அப்படித்தான் ஒரு நாள் எம்ஜிஆர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது ரயிலில் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அப்போது பழனி பெரியசாமி பாலிடிக் மலையில் இருந்து நியூயார்க் வரை ரயிலில் செல்ல ஏற்பாடு செய்தார். எம்ஜிஆர் காதல் வந்த இறங்கி ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்ல முயன்ற நேரத்தில் அப்போது காரில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்து கையில் குழந்தையுடன் எம்ஜிஆரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
அந்தப் பெண் வருவதைப் பார்த்து எம்ஜிஆர் நின்று விட்டார். அங்கு வந்த பெண் நான் உங்களுடைய தீவிர ரசிகை, நீங்கள் ரயிலில் செல்வதாக கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க ரிஷ்மண்ட் என்ற இடத்திலிருந்து மூன்றரை மணி நேரம் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தேன் என கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணின் விருப்பப்படி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்ஜிஆர் பிறகு வழி அனுப்பி வைத்தார். உடனே பழனி பெரியசாமி நீங்கள் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததால் ரயில் சென்று விட்டது என கூறியுள்ளார். உடனே சிரித்துக்கொண்டே எம்ஜிஆர் ரயில் போகும் வரும். ஆனால் எனக்காக மூன்றரை மணி நேரம் காரை ஓட்டி வந்த அந்த பெண் என்னை பார்க்காமல் சென்று இருந்தால் அவர் வருத்தப்பட்டு இருப்பார். தற்போது அவர் சந்தோஷத்துடன் செல்வதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி நெகிழ வைத்தார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…