“கார் மீது செங்கல்லை தூக்கி வீசி…” பைக்கில் சென்ற போதே அட்டூழியம் செய்த 3 பேர்…. பின்னணி என்ன…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 11, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது நபர்கள் சிலர் செங்கலை வீசித் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதில் காரின் முன் பக்கக் கண்ணாடி பலத்த சேதமடைந்தது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த லூதியானா போலிஸார், தொழில்நுட்ப விசாரணை மற்றும் காரின் பதிவு எண்களின் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்ட 3 நபர்களைக் கண்டறிந்து கைது செய்தனர்.

   

போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் சென்ற நபருக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.