ஈரோட்டில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களில் சிலர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் வெப்பம் காரணமாக 3 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தீவிரமாக இருப்பதால், அவர்களுக்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு திடீர் வலிப்பு, மயக்கம் மற்றும் அதீத உடல் சோர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு பெண் உட்பட சிலர் கூட்டத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்களுக்குத் தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்தனர்.
