இளம் பெரியாரா…? பெரியாரை அசிங்கப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் – திமுகவை விளாசிய ஆதவ் அர்ஜுனா..!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

ஈரோடு தவெக மாநாட்டில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, வாரிசு அரசியல் மற்றும் சமூகநீதி குறித்து அனல் பறக்கும் கருத்துகளை முன்வைத்தார். “தந்தை மற்றும் மகன் என இரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞர் மாநாட்டை நடத்தினார்கள். அதில் மகனை (உதயநிதி ஸ்டாலின்) ‘இளம் பெரியார்’ என்று அழைக்கிறார்கள். சமூகநீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை இளம் பெரியார் என்று சொல்வதா?” என கேள்வி எழுப்பினார்.

தந்தை பெரியார் ஒரு சகாப்தம் என்றும், அவரைப் போல ஒருவர் இதுவரை உருவாகவும் இல்லை, இனிமேல் உருவாகப் போவதுமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மறைந்த மாபெரும் தலைவர்களைத் தங்களின் சுய லாபத்திற்காக இதுபோன்று ஒப்பிட்டு அசிங்கப்படுத்தினால், தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய போராட்டத்தைக் கையிலெடுக்கும்” என ஆளுங்கட்சிக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார். ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா பேசிய இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.