புதுவையில் புதிதாக 3 அமைச்சர்கள்.. அறிவிப்பு வந்தது.. அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

புதுச்சேரி அமைச்சரவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிதாக 3 அமைச்சர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) ராஜசேகரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர்; இவர்களுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இணைந்து நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய அமைச்சரவை விரிவாக்கம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.