BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும், அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.