அதிகாலையில் பயங்கரம்….! மின்னல் வேகத்தில் வந்த BMW கார்… விபத்தில் சிக்கி 3 பேர் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

மும்பை கோஸ்டல் ரோடு பகுதியில் உள்ள லோட்டஸ் ஜெட்டி அருகே செப்டம்பர் 20-ஆம் தேதி அதிகாலை சுமார் 5:20 மணியளவில் அதிவேகமாகச் சென்ற பி.எம்.டபிள்யூ கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 21 வயதான ஷானே கஜ்ஜால் , 17 வயதான தீர்யா சேத் மற்றும் 25 வயது இளைஞர் ஒருவர் உட்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 வயது இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காரின் அதிவேகமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையின் இந்த முக்கிய விரைவுச்சாலையில் செப்டம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை சுமார் 62,000 போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெறிச்சோடிய சாலைகளில் அதிவேகமாகச் சொகுசு கார்களை இயக்குவது உயிரைப் பறிக்கும் ஆபத்தாக மாறுவதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.