“அழகாக இருப்பதால் சிறைத் தண்டனை இல்லையா…? 14 வயது மாணவனுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை… 20 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான ரகசிய வாழ்க்கை… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்த டெப்ரா லஃபேவ் என்பவர், கடந்த 2004-ம் ஆண்டு தனது 24 வயதில் 14 வயது நிரம்பிய பள்ளி மாணவன் ஒருவனுடன் சட்டவிரோதமாகப் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவனுடன் வகுப்பறை, தனது எஸ்யுவி காரின் பின்புறம் மற்றும் கணவர் வாழ்ந்த வீடு எனப் பல இடங்களில் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லஃபேவ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அப்போது அவரது வழக்கறிஞர், “அழகான இளம் பெண்ணான லஃபேவைச் சிறையில் அடைப்பது என்பது பச்சை இறைச்சித் துண்டை சிங்கங்களுக்கு போடுவதற்குச் சமம்” என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்குச் சிறைத் தண்டனைக்கு பதிலாக வீடடைப்பு மற்றும் நன்னடத்தை கண்காணிப்பு மட்டுமே விதித்து உத்தரவிட்டார். பெண்ணாக இருந்ததாலும், அழகாக இருந்ததாலும் மட்டுமே அவர் சிறைத் தண்டனையில் இருந்து தப்பித்தார் என்றும், இதுவே ஒரு ஆணாக இருந்திருந்தால் ஆயுள் தண்டனை கிடைத்திருக்கும் என்றும் பலரும் கொதிப்படைந்தனர்.

   

தற்போது 20 ஆண்டுகள் கழிந்த நிலையில், 45 வயதான டெப்ரா லஃபேவ் தனது பெயரை ‘டெப்ரா ஜீன் வில்லியம்ஸ்’ என மாற்றிக் கொண்டு, புதிய கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் ரகசியமாக வாழ்ந்து வருவது அம்பலமாகியுள்ளது. பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அவர், பள்ளிகளில் இருந்து 1000 அடி தூரத்திற்குள் வசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியான முறையில் பெயரை மறைத்து வாழ்ந்து வரும் விவகாரம் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.