தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பேசிய அவர், 2027 பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை இருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
