“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத ஆத்திரத்தில் அவர்களைக் கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் விகாராபாத் மாவட்டம் யச்சாரத்தில், தனது பெற்றோருக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தி கொன்ற அவர், அதனை உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மரணம் என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்தார். இருப்பினும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிவரவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைவாசத்திற்குப் பிறகு சமீபத்தில் விடுதலையாகி மீண்டும் சங்கரெட்டிக்குத் திரும்பிய சுரேகா, அங்குள்ள சாந்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அங்கு, தன் பெற்றோரின் உயிரைப் பறிக்கப் பயன்படுத்திய அதே மயக்க மருந்து ஊசியைத் தனக்கும் செலுத்திக்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். காதலுக்காகப் பெற்றோரைக் கொன்றுவிட்டு தற்போது குற்ற உணர்ச்சியால் தானும் உயிரை மாய்த்துக்கொண்ட இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.