வீட்டிற்கு வெளியே விளையாடிய 3 சிறுவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

சென்னை பிராட்வே பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஹோட்டல் நடத்திவரும் நிலையில் இவருக்கு சாய் கிரண் மற்றும் சாய்சரண் என 12 வயதில் இரட்டை மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற சிறுவர்கள் சக நண்பனான யூசுப் என்பவரின் மகன் அன்வர் என்ற சிறுவனுடன் விளையாடி உள்ளன.

நீண்ட நேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனே போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த சிசிடிவி காட்சியை வைத்து சிறுவர்களை தேடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.