தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் திங்கட்கிழமை… அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் நாளையுடன் அனைவருக்கும் விடுமுறை நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளி திறந்த முதல் நாளே காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் விநியோகிக்க வேண்டும். 2 ஆம் பருவத்திற்கான பாட நூல்கள் உடனே வழங்க வேண்டும். பள்ளி வகுப்பறை உட்பட பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.