கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் 13 வயது சிறுமியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து 13 முதல் 15 வயதுடைய 3 சிறுவர்களை கைது செய்துள்ளனர். இந்த சிறுவர்கள் சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் சிறுமியை அனுகி தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அதனை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் சிறுவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
