காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… கூண்டோடு தவெக-வில் இணையும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள்…. பனையூர் போட்ட பயங்கர ஸ்கெட்ச்…. அதிமுக கூடாரத்தைக் காலி செய்யும் விஜய்….!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

மரகதம் குமரவேல் தலைமையில் அதிமுகவின் கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கூண்டோடு தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணையவுள்ளதாக தனியார் இதழில் வெளியான செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த இணைப்பு விழாவானது, தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் ஆணிவேராகக் கருதப்படும் அடிமட்ட கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் ஈர்த்து, அக்கட்சியின் அடித்தளத்தையே களையெடுக்கும் வியூகத்தை தவெக தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் பனையூர் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.