இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் வேண்டுமென்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வருடத்திற்கு ஒருமுறை உணவு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இடியாப்பம் விற்பனை செய்யும் போது கையுறை மற்றும் தலை உறை அவசியம். உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
