வெறும் 6 சீட்டா..? அந்த கட்சி அழிந்துபோய்விடும்… சாபம் விட்ட தேமுதிக பிரேமலதா…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிக-விற்கு வெறும் 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அதாவது  “எங்கள் கட்சியைப் பற்றித் தவறாகப் பேசுபவர்களுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையடையாத நிலையில் இத்தகைய தகவல்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

தேமுதிக-வின் கூட்டணி அல்லது தொகுதிப் பங்கீடு குறித்து ஏதேனும் செய்தி வெளியிடுவதாக இருந்தால், கட்சித் தலைமையிடம் உறுதி செய்த பின்னரே வெளியிட வேண்டும் என்றும், தங்களைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக தனது பலத்திற்கு ஏற்ற தொகுதிகளைக் கேட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்கள்