தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் தமன்னா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளார். இவர் சில ஒப்பந்தங்களோடு தான் படமே நடிப்பாராம். அதில் ஒரு விதிமுறை [நோ-கிஸ்]. அவர் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் முத்த காட்சிகள் இருக்காது, இருந்தாலும் ஒப்பந்தத்தின் படி படத்தையே கமிட் பண்ண மாட்டாராம். ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு netflix இல் வெளியான ‘ல்ஸ்ட் ஸ்டோரி’ என்ற படத்தில் சில நெருக்கமான காட்சிகளுடன் நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சிலர் வெப் தொடர்களிலும் செக்ஸியான காட்சிகளில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தி நிகழ்ச்சி லல்லன்டாப் பேசிய தமன்னா, நான் பல ஆண்டுகளாக சில விதிமுறையின் படி தான் படம் நடித்து வந்தேன். நான் சில கட்டுப்பாடுகள் விதிகளைக் கொண்டவள். ஆனால் அந்தக் காரணத்தினாலே பல வாய்ப்புகளை தவற விட்டேன்.
அதை உணர்ந்த நான் விதிகளை மீறி [நோ-கிஸ்] என்ற விதியை மீறி நடிக்க நினைத்தேன். செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் அனைத்துமே 100% போலியானவை. Intimacy Coach படப்பிடிப்பில் இருப்பார் அவர் சொல்வது போல் தான் நாங்கள் நடிப்போம். அதேபோல் நடனம் ஆடுவதிலும் பயிற்சி அளிப்பார்கள். அவர்கள் சொல்லுவது போல் தான் ஆடுவோம் என்று தமன்னா கூறி இருந்தார். தமன்னா தன் ரசிகர்களிடம் ‘கலையின் தேவைக்கேற்ப, நம்பகத்தன்மை உடன் நடித்தால்தான்’ உண்மையான நடிகர்கள் என நினைக்கிறேன் என்று அவருடைய தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தினார்.
