Connect with us

CINEMA

‘தலைவர் 171’ படத்தில் அந்த நடிகர்களுக்கு வாய்ப்பே இல்லையாம்… ‘லியோ’ பட ரிசல்ட்டால் லோகேஷுக்கு ரஜினி போட்ட கண்டிஷன்…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்பிறகு ஒரு கதையை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார். யாரும் அவரது கதையை எடுப்பதற்கு முன்வரவில்லை பின்னர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷியும் அவரது கதையையும் நம்பி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டது.

   

அப்படி உருவான திரைப்படம் தான் மாநகரம். அழகான திரைக்கதையை குறைவான பட்ஜெட்டில் அமைத்து ரசிகர்களை கவர்ந்தார். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனார். அதன்பின்னர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைக்கு மிகவும் சிறப்பான கதை அம்சத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படம் ,கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ திரைப்படம் போன்றவற்றை இயக்கி மிகவும் பிரபலமானார். லோகேஷின் படங்களை ‘லோகேஷ் யுனிவர்ஷ் LCU ‘ என ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். சமீபத்தில் இவர் நடிகர் விஜயை வைத்து ‘லியோ’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். வசூலில் சாதனை படைத்த  லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காரணம் LCU தான். இதனால் ரஜினி தற்போது உஷாராகி லோகேஷ் கனகராஜின்  முந்தைய திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்க கூடாது என்பது போல கண்டிஷன் போட்டுள்ளாராம். இத்திரைப்படம் கண்டிப்பாக LCUவில் வராது எனவு ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top