தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் பைக் மீது லாரி மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். லாரி பிரேக் ஃபெயிலியர் காரணமாக வேகமாக வந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் தொடரும் விபத்துக்கள் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 92 விபத்துக்கள் நடந்துள்ளது, 2019 ஆம் ஆண்டில் 108 விபத்துக்கள், 2020 ஆம் ஆண்டில் 99 விபத்துக்கள் நடந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் உயிரிழந்துள்ளனர். சாய்வான சாலை மற்றும் குறுகலான திருப்பங்கள் ஆகியவை இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
