TM சௌந்தரராஜன் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு பல பாடல்களை பாடியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் பக்தி பாடல்களையும் பாடி பிரபலமானவர் டி எம் சௌந்தரராஜன். முருகன் பாடல்கள் என்றால் டி எம் சௌந்தரராஜன் தான் என்றும் சொல்லும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் டி எம் சௌந்தரராஜன்.

மதுரையில் பிறந்து வளர்ந்த டி எம் சௌந்தராஜன் சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். 1950 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.
சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்களுக்கும் தனித்தனி குரலில் பாடி அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறத்தும் வகையில் பாடி அசத்திருப்பார் TM சௌந்தரராஜன். இவரது குரல் அந்த நடிகர்களுக்கு கச்சிதமாக பொருந்தும். இது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் கமலஹாசன் ஆகியோர் படத்திலும் பாடியிருக்கிறார் டி எம் சௌந்தரராஜன்.
வீரம் காதல் சோகம் துள்ளல் தத்துவம் நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் 2500 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடி இருக்கிறார் TM சௌந்தரராஜன். 2019 இல் உலக செம்மொழி மாநாட்டில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலே டி எம் சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். இவ்வளவு பிரபலமான இருந்த டி எம் சௌந்தரராஜன் அவர்களுக்கே வாய்ப்பு போனது ஒரே ஒரு பாடலால்தான் என்று அவரே வருத்தப்பட்டு ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். அது என்ன பாடல் என்பதை பார்ப்போம்.

டி ராஜேந்தர் நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ஒரு தலை ராகம். இந்த திரைப்படத்தில் என் கதை முடியும் நேரம் இது என்ற பாடலை TM சௌந்தரராஜன் பாடியிருப்பார். இந்த பாடல் நெகட்டிவ்வாக வருவதால் இந்த பாடலை பாடிய பிறகு தான் தனக்கு வாய்ப்பு போய்விட்டது. அதற்குப் பிறகு எனக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வரவில்லை என்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார் TM சௌந்தரராஜன். இதேபோல் எம்ஜிஆர் தனது படத்தில் வரும் பாடல்களாகட்டும் வசனங்கள் ஆகட்டும் எந்த ஒரு நெகட்டிவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பதில் கரெக்ட்டாக இருப்பாராம்.
