tvk

நடிகர் விஜயின் கட்சி கொடியை தாங்கும் கொடி கம்பத்தில் இத்தனை சிறப்பம்சங்களா…? இது லிஸ்ட்லயே இல்லையே…

By admin on ஐப்பசி 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். டாப் ஸ்டார் ஆக தமிழ் சினிமாவில் இருந்த போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் சினிமாவை விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்து அரசியலில் களமிறங்க போவதாகவும் கூறியிருந்தார்.

   

அதன்படி தனது கட்சி பெயர் தமிழக வெற்றி கழகம் என்றும் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்தார் விஜய். தற்போது நாளை அக்டோபர் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை பார்க்கும்போதே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

   

மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கார், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோருடன் விஜயின் கட்அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் 100 அடி கொடிக்கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட இருப்பதாகவும் வீடியோக்கள் வெளியானது. இந்த 100 அடி கொடி கம்பமே அவ்வளவு பார்த்து பார்த்து பல சிறப்பம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

 

தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்றவிருக்கும் இந்த கொடிக்கம்பம் 101 அடியில் இருக்கிறது. இந்த கொடிக்கம்பத்தில் 20 அடி உயரம் 30 அடி அகலத்தில் தயாரான கொடி ற்றப்பட இருக்கிறது. இந்த கொடி கம்பத்தின் உச்சியில் இடிதாங்கி பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கொடி கம்பத்தின் கீழ் ஆறு அடி உயரத்தில் கல்வெட்டு வைக்கப்பட இருக்கிறது. விஜய் அவர்கள் இந்த கொடியை ரிமோட் மூலம் ஏற்ற இருக்கிறார். அடுத்த 25 வருடங்கள் இந்த கொடிக்கம்பம் துரு பிடிக்காமல் இருப்பதற்காக வேதியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது. மேலும் 10 ஆண்டுகள் கொடிக்கம்பம் அங்கே இருக்கும் படியாக நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் பேசப்பட்டு இருக்கிறது. ஒரு கொடி கம்பத்துக்கு இத்தனை விதமாக யோசித்து பார்த்து செய்திருக்கிறார் நடிகர் விஜய் என்பது ஆச்சர்யமடைய வைக்கிறது.