இதுதான் உங்க நாகரிக அரசியலா..? CM விஜய்.. சோழர் செப்பேடு விவகாரத்தில்.. வானதி சீனிவாசன் அட்டாக்..!

Spread the love

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் என்ற முறையில் விஜய் ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டுமொத்த தமிழகமே பிரதமரைப் பாராட்டி உச்சி முகர்ந்து கொண்டாடும் வேளையில், முதல்வரின் இந்த மௌனம் தமிழ் வரலாற்றின் மீதான அலட்சியத்தையே காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார்.

நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு, முதலமைச்சர் விஜய் இதுவரை மெத்த மௌனம் சாதித்து வருவதாக வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்று விமர்சித்துள்ள அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் முதலமைச்சருக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் பறைசாற்றிய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய நடவடிக்கைகள், கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் வழிமரபில் வந்த விஜய், தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்குப் பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் அவசியப்படும் “நாகரிக அரசியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது என்று கூறியுள்ளார். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Swetha

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

2 மணத்தியாலங்கள் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

3 மணத்தியாலங்கள் ago