தமிழ் சினிமாவில் முன்னணி நடிராக இருந்து வருபவர் விஜய். என்னதான் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தாலும் சினிமா வேண்டாம் என்று ஓய்வெடுப்பதாக அறிவித்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியை தொடங்கி அதன் பணிகளை கவனித்து வருகிறார் விஜய். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் ஆகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வசூல் சாதனை படைத்து விடும்.
மேலும் ஏற்கனவே கமிட்டான தளபதி 69 படமான ஜனநாயகன் படத்தில் நடித்துவிட்டு அவர் முழு நேர அரசியலில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘வாரிசு’.
இந்த வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கியிருக்கிறார். தில் ராஜு தயாரித்திருக்கிறார். விஜயுடன் சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷியாம், பிரபு, பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் குஷ்பூ ஒரு 45 நிமிட காட்சிகளுக்காக நடித்து இருந்தார். அந்த காட்சிகளை படத்தின் ரிலீஸ்க்கு முன்னால் நீக்கி விட்டார்கள். அது என்ன காரணம் என்று அப்படத்தின் எடிட்டர் பிரவீன் விளக்கி கூறியிருக்கிறார்.
எடிட்டர் பிரவீன் கூறியது என்னவென்றால் குஷ்பு மேடம் நடித்த காட்சி ஒரு 45 நிமிடங்கள் இருந்தது. அதற்காக 15 கோடி செலவழித்து படமாக்கினார்கள். ஆனால் படத்தின் மொத்த நீளம் மூனே முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அவ்வளவு மணி நேரத்தில் படம் வெளியிட முடியாது என்பதால் அவருடைய 45 நிமிடங்களை நாங்கள் கட் செய்துவிட்டோம். ஆனாலும் குஷ்பு மேடம்க்கு பெரிய மனசு. போன் பண்ணி நாங்கள் கேட்டுக் கொண்டதால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டார் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் எடிட்டர் பிரவீன்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…