Categories: சினிமா

மணிவண்ணன் சார் பெரிய இயக்குனர் தான்… ஆனாலும் என் பட ஷூட்டிங்கில் இப்படி பண்ணிட்டார்… மனம் திறந்த இயக்குனர் விக்ரமன்…

Spread the love

விக்ரமன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பார்த்திபன், மணிவண்ணன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார் விக்ரமன். பின்னர் 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன்.

தொடர்ந்து கோகுலம், புதிய மன்னர்கள் போன்ற திரைப்படங்களை இயக்கினார். 1996 ஆம் ஆண்டு நடிகர் விஜயை வைத்து பூவே உனக்காக திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று குடும்பங்களின் ஆதரவை பெற்றது. அதை கடந்து 1997 ஆம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படத்தை இயக்கினார் விக்ரமன். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி பல தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது.

தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், 2000 ஆம் ஆண்டு வானத்தைப்போல, 2002 ஆம் ஆண்டு உன்னை நினைத்து ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த மூன்று திரைப்படங்களுமே தமிழ்நாடு மாநில மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் போன்றவற்றை வென்று இருக்கிறது.

பிறகு பிரியமான தோழி நினைத்தது யாரோ ஆகிய திரைப்படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது படம் எதுவும் இயக்கவில்லை. இவரது மகன்தான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விக்ரமன் மணிவண்ணன் அவர்களை பற்றி பதிந்திருக்கிறார்.

விக்ரமன் கூறியது என்னவென்றால் நான் மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அதற்கு பிறகு சூரியவம்சம் படத்தில் அவரை நடிப்பதற்காக கேட்டிருந்தேன். அவர் நடிப்பதற்காக வந்திருந்தார். அவர் எவ்வளவு பெரிய இயக்குனர் ஆனாலும் என் பட சூட்டிங்கில் என்னிடம் ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு நடித்தார் எவ்வளவு பெரிய மனுஷன் இவ்வளவு தன்மையாக நடந்துக்கிறாரே என்று நானே ஆச்சரியப்பட்டேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் விக்ரமன்.

admin

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

45 seconds ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

3 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

7 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

10 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

22 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

25 minutes ago