தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கையால் மட்டுமே சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு வந்திருப்பவர் அஜித்குமார். மாடலாக தனது கரியரை ஆரம்பித்த அஜித்குமார் கார் ரேசிங்கிலும் ஆர்வம் கொண்டு அதிலும் பங்கேற்றிருக்கிறார்.
மாடலாக இருந்ததால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்த அஜித்குமார் மெல்ல மெல்ல தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதால் சாக்லேட் பாய் என்று பெயர் எடுத்தார். சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இன்று முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் அஜித்குமார்.
என்னதான் அஜித்குமார் நடிகராக இருந்தாலும் கார் ரேசிங்கில் அவருக்கு இருந்த அதீத ஆர்வம் கொண்டிருந்ததால் அதை விடவில்லை. அவ்வபோது கார் ரேசிங்கில் ஈடுபடுவதும் பயிற்சி எடுப்பதும் போன்ற புகைப்படங்கள் வெளிவரும். தற்போது அஜித்குமார் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்குமார் தலைமையில் உண்டான குழு கார் ரேசிங்கில் பங்கேற்க இருக்கிறது. இந்த கார் ரேசிங்காக தீவிரமாக பட சூட்டிங் பிசியான ஸ்கெடியூலுக்கு நடுவிலும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அஜித்குமார். இந்நிலையில் இன்று காலை உதயநிதி ஸ்டாலின் அஜித்குமார் தனது கார் ரேசிங் ஹெல்மெட் மட்டும் காரில் தமிழக விளையாட்டு ஆணைய லோகோவை அதில் பதித்திருப்பதற்காக நன்றியை தெரிவித்து இருந்தார். அதை விமர்சித்த தமிழிசை சௌந்தர்ராஜன் விஜயை வெறுப்பேற்றுவதற்காகவே அஜித்துக்கு நன்றி கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் இதில் வேறு எதுவுமே இல்லை என்று போட்டு உடைத்து பேசியிருக்கிறார்.